கை கோர்க்கும் சீனாவும் இந்தியாவும்!

PetroKazakhstan என்னும் எண்ணை நிறுவனத்தை வாங்க இருபெரும் ஆசிய சக்திகளான சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டன. இந்த போட்டி பற்றி எனது முந்திய பதிவில் எழுதியிருக்கிறேன். இதில் வெற்றி பெற்றது சீனா.

வெகு வேகமாக வளர்ந்து வரும் இரு ஆசிய அண்டை நாடுகள் சீனாவும் இந்தியாவும். இவ்விரு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் அளவிற்கு இந்நாடுகளில் எண்ணைக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

2004-ல் இந்தியா ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்க்கு மேல் எண்ணை உபயோகித்திருக்கிறது. இவற்றில் 70 சதவிகிதத்திற்கு அதிகமானவை இறக்குமதி செய்யப்பட்ட எண்ணைதான். 2025-ல் இந்தியாவிற்கு ஒருநாளைக்கு 7.4 மில்லியன் பீப்பாய்க்கு மேல் எண்ணை தேவைப்படும் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சீனா...

தற்போதைய உபயோகம், இறக்குமதி.
எண்ணை நிறுவனங்களை வாங்க வேண்டிய அவசியம்
போட்டி தவிர்க்க இயலாதது
இவர்கள் அமெரிக்காவுடனும் போட்டி போட வேண்டும்.

இவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை மொத்த உலகமும் உற்று கவனித்து வருகிறது.
இந்த நூற்றாண்டின் மகத்தான பொருளாதார சக்தியாக வளரக்கூடிய சாத்தியக்கூறு இந்த இரு நாடுகளுக்குமே இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருந்தால் வளர்ச்சி என்னாவது?
புத்திசாலித்தனமான நடவடிக்கையாக, தேவை ஏற்படும்போது இணைந்து செயலாற்றுவது என்ற முடிவு.

சிரியா எண்ணை நிறுவனத்தை இணைந்து வாங்கியிருக்கிறார்கள்.
Economy of Scale
அமெரிக்கா போன்ற பெரும் போட்டியாளர்களை ஒரளவுக்கு சமாளிக்கலாம்.

sceptics இதெல்லாம் சரி வருமா என கேள்வி எழுப்புகிறார்கள். 1962-ல் நடந்த எல்லைத்தகராற்றை உதாரணம் காட்டுகிறார்கள்.

இருவரின் கவனமும் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும்வரை சிறு சிறு அரசியல் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்பில்லை.

பொருளாதார உறவுகள் வலுப்பெற்றால், அது அரசியல் மனஸ்தாபங்களை அமுங்கிப்போகச் செய்யலாம்.

கருத்துகள்